விஜயகலாவுக்கு ஆதரவாக மஹிந்த; தென்னிலங்கை அரசியலில் அதிசய திருப்பம்!

171shares

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யூலை இரண்டாம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரான சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ச உட்பட்ட பொது எதிரணியினர், இந்த உரை அரசியலமைப்பை மீறும் விதத்தில் அமைந்துள்ளதென தெரிவித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர்.

பொது எதிரணியினர் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரும், முன்னாள் அமைச்சர்களும் விஜயகலாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டுவந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசணைக்கு அமைய விஜயகலா தனது அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தீடிரென குறித்த உரை தொடர்பில் கடும் கண்டனங்களை வெளியிட்டு வந்த மகிந்த உட்பட அவரது சாகாக்கள் சமீப காலமாக விஜயகாலவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றமை தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் அதிசயமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச குறித்த கருத்து தொடர்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அந்த கருத்துக்கு பின்னணியில் தற்போதைய தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, அரசாங்கம் முழு மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இந்த விடயம் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அரசாங்கத்தின் இயலாமையே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றமைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார்.

இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய, இதனையே நாட்டு மக்களும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மாத்தரை பாலட்டுவ என்ற இடத்தில் எளிய என்ற வெளிச்சம் அமைப்பினர் நாட்டின் சமகால அரசியல் நிலமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்திவரும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!