தங்களின் சிறப்புரிமை மீறப்பட்டால் பொங்கும் அமைச்சர்கள், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் ஏன் தாமதம்?

6shares

வடக்கு மாகாண சபையில் தன்னுடைய சிறப்புரிமை மீறப்படுவதாகத் தெரிவித்து மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஜீ. குணசீலன்நேற்றைய சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

மாகாண சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது முல்லைத்தீவு மாவட்டங்களில் மருந்தகங்கள் தடை செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட விடயம் குறித்து உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதன் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் விசேட கவனமெடுத்துச் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சரின் செயற்பாடுகள் பாகுபாடில்லாமல் அமைய வேண்டுமென்றும் சிவாஐிலிங்கம் கேட்டுக் கொண்டார். அத்தோடு மக்களது நலன்களை முன்னிலைப்படுத்தியதாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் குணசீலன் மக்கள் நலனுக்காகவே தான் செயற்பட்டு வருவதாகவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் முல்லை மாவட்டம் மட்டுமல்லாது வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலுமே தன்னுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு இருவரும் மாறி மாறி தமது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்த போது பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வாதப்பிரதி வாதங்களும் இடம்பெற்றது. இதன் போது தன்னுடைய சிறப்புரிமையை மீறும் வகையில் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை சிவாஐிலிங்கம் முன்வைப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் குணசீலன் சிறுப்புரிமையைப் பாதுகாக்கும் உறுதிமொழியை அவைத் தலைவர் தெரிவித்தாலே தான் சபையில் தொடர்ந்தும் இருக்க முடியுமெனக் கூறி சபையிலிருந்த வெளிநடப்புச் செய்தார்.

இதன் பின்னர் இந்த விடயங்கள் தொடர்பில் சபையில் பலரும் பலவாறு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் உறுப்பினரான அயூப் அஸ்மின் இந்தச் சபையில் சக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்து அநாகரிக வார்த்தைகளை சிவாஐிலிங்கம் பிரயோகிப்பதை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறீர்களா என்று அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்கின்றவர்களை வெளியே அனுப்ப வேண்டுமென்றும் அவைத் தலைவரிடம் கேட்டார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களை சமரசப்படுத்திய அவைத் தலைவர் சிவஞானம் சிவாஐிலிங்கம், வார்த்தைகளை கூறிய அமைச்சர் எவ்வாறான எண்ணத்தோடு எவ்வாறு விளங்கிக் கொண்டாரோ தெரியவில்லை. ஆகையினால் அந்த வார்த்தைகள் அவரைப் பாதித்திருந்தால் அதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அனைவரதும் சிறப்புரிமைகள் பாதுகாக்கப்படுமென்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சபை அமர்வில் வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கையில் சிறுது நேரத்தின் பின்னர் அமைச்சர் குணசீலன் சபைக்கு வருகை தந்து தொடர்ந்தும் நடைபெற்ற சபை அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சபை அமர்வு குறித்து மேலும் தெரியவருவதாவது

நேற்றைய சபை அமர்வு ஆரம்பத்தில் அவைத் தலைவர் சபை அறிவிப்புக்களை விடுத்துக் கொண்டிருந்த போதே சபையின் உறுப்பினரான கேசவன் சயந்தன் சிறப்புரிமை மீறல்ப் பிரச்சனையொன்றை எழுப்பியிருந்தார். இந்த விடயம் சபையில் பெரும் சர்ச்சைகளையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஒரே கட்சிக்குள்ளேயே பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பதாக அமைந்திருந்தது.

இந்த விடயத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாத்திரமே விவவாதித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அதிலும் ரெலோ சார்ந்த உறுப்பினர்களான சிவாஐிலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோருக்கிடையே பெரிய வாதப்பிரதிவாதங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்து.

அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்தகங்கள் மீதான தடை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சிவாஐிலிங்கம் சபையில் தெரிவித்திருந்தார். இதன் போதும் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. அதிலும் மேற் கூறியது போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் உறுப்பினர்களான சிவாஐிலிங்கம் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் குணசீலன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

இவ்வாறு நேற்றைய அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்களே விவாதித்து வாதப் பிரதிவாதங்களை முன்வைத்ததுடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதிலும் ரெலோ கட்சி சார்ந்த உறுப்பினர்களே பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வார்த்தைகளால் மோதிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!