மாகாண அமைச்சர்கள், முதலமைச்சர் பங்கு பற்றாத வடமாகாண சபை அமர்வு!

9shares
Image

வடக்கு மாகாணசபையின் 127வது அமர்வு இன்றையதினம் யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அமைச்சரவை விடயத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு பத்தொன்பது உறுப்பினர்கள் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்றைய விசேட அமைர்வு இடம்பெற்றது.

இவ்விடயம் உச்ச நீதிமன்றில் உள்ளபடியால், தான் இதில் கலந்து கொள்ளவில்லை என கடிதம் மூலம் அறிவித்து இன்றைய அமர்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்திருந்தார். அத்துடன் முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சரான ப.டெனீஸ்வரன் இவ் அமர்வில் கலந்துகொண்டபோதிலும் அவர் அங்கம் வகிக்கும் கட்சியான ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும் இன்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தபோதும், மேற்படி விவாதத்தில் தாம் பங்குகொள்ளவில்லை என தெரிவித்து அமர்விலிருந்து வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து அவைத்தலைவர் இந்த விசேட அமர்வை ஆரம்பித்துவைத்தார். மாகாண அமைச்சர்கள் எவரும் பங்கு பற்றாத நிலையில் பத்தொன்பது உறுப்பினர்களுடன் இந்த விவாதம் இடம்பெறுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!