போலிவாக்குறிதிகளை வழங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்!

6shares
Image

அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்காது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தற்போது இருக்கின்ற அரசாங்கத்தின் மூலம் அரசியல் தீர்வோ அரசியல் யாப்பு மாற்றமோ ஏற்படுமென தாம் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் ஒரு தீர்வை கொடுப்போம் என ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

அத்துடன் அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அரசியல் யாப்பிற்கான பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசியல் யாப்பு பணிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் போலியானது என மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பௌத்த மதத்திற்கும் இராணுவத்திற்கும் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத, அரசாங்கம் உருவாக்கியிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிரந்தர அலுவலகம் எவ்வாறு இராணுவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!