சர்வதேச நாடுகளுக்கு அடிபணியாத தலைவரைத் தேடுகின்றது ஒன்றிணைந்த எதிரணி!

9shares
Image

சர்வதேச நாடுகளுக்கு முன்பாக, புலம்பெயர் அமைப்புகளுக்கு அடிபணியாத ஓர் தலைவர் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஜனாதிபதி, பிரதமர் சபாநாகர் என யாரிடம் வினவினாலும் அவர்கள் பதில் கூற மறுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இரத்தினபுரி பெல்மடுல்லையில் பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்திருந்த மக்கள் கூட்டமொன்றிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலம் தாமதித்து செயற்படுகின்றது. தொடர்ந்து உள்ளுராட்சிசபைத் தேர்தலை நடாத்துமாறு கோரிவந்த நிலையில் இரண்டரை வருடங்கள் கழித்து நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்தியது. அதன் மூலமே நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை உணர்ந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற வெற்றிக்கு முன்னதாக மண்டியிட்டனர்.

2015ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தினர் நாட்டின் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பினை இருந்த நிலையினைவிட கீழே தள்ளியுள்ளனர். நாட்டு மக்கள் நன்கு இதனை அறிந்துள்ள நிலையில், தற்போது நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறுகின்றனர்.

எனினும் 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு 473 நாட்கள் மாத்திரமே உள்ளது. காலம் நெருங்கி வருகின்றமையால் நல்லாட்சி அரசாங்கம் மிகுந்த அச்சத்திலுள்ளது.

இந்நிலையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலினையும் காலதாமதம் செய்ய முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட முழு ராஜபக்ச குடும்பத்தினையும் பழிவாங்க திட்டமிடுகின்றனர்.

அன்று ஜே.ஆர். ஜயவர்தன செய்த செயற்பாட்டினப் போல இன்று இவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு செய்ய திட்டமிடுகின்றனர். மக்கள் அதற்கு ஒருபோதும் அஞ்ச வேண்டாம்.

நமது நாட்டிற்கு சர்வதேச நாடுகளுக்கு முன்பு, புலம்பெயர் அமைப்புகளுக்கு அடிபணியாத ஓர் தலைவர் நமக்கு 7அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேவை எனத் தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!