மட்டக்களப்பில் கட்சி தாவல்கள் ஆரம்பம்; ரணிலுடன் முரண்பட்ட குழுவினர் மகிந்த ராஜபக்சவிடம்?

18shares


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மகிந்த ராஜபக்சவின் தாமரை மொட்டுக் கட்சிக்கு பாய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கல்குடா தொகுதி தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக கட்சிக்குள் சிலர் முரண்பட்டதாகவும் குறித்த முரண்பாடு ரவி கருணாநாயக்கவின் செங்கலடி முகவரினால் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

கல்குடா தொகுதி கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இருந்ததாகவும் ஆனால் தற்போது அங்கு கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த சரிவுக்கு காரணம் செங்கலடியை சேர்ந்த மோகன் அவர்கள் தான் என ஒரு தரப்பினர் பிரதமர் ரணிலிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை சமாளித்து விட்டதாக கூறப்படுகிறது.

இன்நிலையில் குறித்த விடயத்தில் முரண்பட்ட குழுவினர் தாங்கள் கடந்த 40 வருடமாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக பணியாற்றிய போதும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களின் நலனில் அக்கறை கொள்ளாது தொடர்ச்சியா ஒரு தரப்பை திருப்தி படுத்துவதாகவும் புதிதாக வந்த சிலர் தங்களது செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக செங்கலடி மோகனின் செயற்பாடுகளில் தாங்கள் அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் இதனால் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மகிந்த ராஜபக்சவின் தாமரை மொட்டு கட்சிக்கு பாய தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த இரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!