ஆளும் கட்சிக்குள் எதிர்க்கட்சி அதிருப்தியில் கூட்டமைப்பு வெளிநடப்பு!

8shares
Image

வட மாகாண சபையின் ஆளும்கட்சியான தமிழ்த் தேசியக் கூடட்மைப்பின்

உறுப்பினர்களுக்கிடையில் நேற்றும் வடமாகாண சபை அமர்வின் போது காரசாரமான

வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் தேசியக் கூடட்மைப்பினரிடையே நிலவிய இந்த வாக்குவாதத்தை அடுத்து

ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சியொன்று இருப்பதாக கூறி தமது அதிருப்தியை வெளியிட்ட தமிழ்

தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இன்றைய அமர்வில் இருந்து வெளிநடப்பு

செய்துள்ளனர்.

இதேவேளை முதலமைச்சருக்கும், பதவி நீக்கப்பட்ட அமைச்சர் டெனீஸ்வரனுக்கும் இடையில்

நீடித்துவரும் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவராவிடின் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை

அமர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என வடமாகாண எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்மூலம் மக்களின் பணத்தை ஒரளவேனும் சேமிக்க முடியும் என மாகாண அமைச்சர்கள்

தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சி உறுப்பினர்

தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சபையின் 129 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவை சபா மண்டபத்தில்

சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இன்றைய அமர்வின் போது முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிமனையின்

முன்னாள் சுகாதாரப் பிராந்தியப் பணிப்பாளரின் கடமைக் காலத்தில் நிதி மோசடிகள்

குற்றச்சாட்டுக்கள் குறித்து வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே குறுக்கிட்ட வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா ஒழுங்குப்

பிரச்சினையொன்றை எழுப்பியிருந்ததுடன், முதலில் யார் சுகாதார அமைச்சர் என்பதை

தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

எனினும் இந்த விடயத்தில் முடிவொன்று எட்டுவதில் சிக்கல் நீடித்ததை அடுத்து ரவிகரனின்

கேள்வியை ஒத்திவைத்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்கட்சித் தலைவரின்

அவரச கோரிக்கையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கினார்.

முக்கியமான விவாதங்களில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாமை குறித்து

அதிருப்தி வெளியிட்ட சி.தவராசா, சபைக்கு அமைச்சர்கள் வகைகூறல் தொடர்பான அவசர

கோரிக்கை என்ற தொனிப்பொருளில் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண சபை உறுப்பினரான அயூப் அஸ்மின், வட

மாகாண சபையின் அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான விளக்கத்தை

வழங்க எம்.கே.சிவாஜிலிங்கம் முனைவதாக குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மாகாண சபை அமர்வை

கூட்டுவதில் பயனில்லை என குறிப்பிட்ட வட மாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர்

தவநாதன், அவ்வாறு செய்தால் மக்களின் பணத்தையேனும் மீதப்படுத்த முடியும் என

கூறினார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூன்று விடயங்களை செய்தால் அமைச்சர் தொடர்பான

சர்ச்சையில் இருந்து தாம் விலகி விடுவதாக பா.டெனீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!