மகிந்தவோ, கோத்தாவோ இப்படி வெட்கக்கேடான காரியங்களைச் செய்யவில்லை!!

82shares

அரசியல் ரீதியாக பழிவாங்கி தன்னை ஓரம்கட்டுவதற்கான பாரியசதித் திட்டமொன்று அரசாங்கத்திற்குள் இருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின்தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில்ஒருவரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பகிரங்கமாககுற்றம்சாட்டியிருக்கின்றார்.

கடந்த சில வாரங்களுக்குள் தன்னுடன் இருந்தஇளைஞர்கள் மூவரை போதைப்பொருட்களை அருகில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் சரத் பொன்சேகா, தன்னை பழிவாங்குவதற்காகவே இவ்வாறான வெட்கக் கேடான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து உயிரைப் பணயம் வைத்து தான் அரசியலில் ஈடுபட்டிருந்த போதுகூட மஹிந்த மற்றும் அவரது சகோதரர்களினால் இவ்வாறான வெட்கக் கேடான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று கூறி மஹிந்தவின் ஆட்சிக்கு புகழாரமும் சூட்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான களனியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, ஊடகவியலாளர்கள்எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தற்போதைய தேசிய அரசாங்கத்திற்குள்ளேயேஇடம்பெறும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களைஅம்பலப்படுத்தியிருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?