தமிழனப் படுகொலைக்கு நீதிகோரியதால் திருமுருகன் காந்தி கைது: ஈழத் தமிழர்கள்

36shares

ஈழத் தமிழர்களுக்காக எதிராக சிறிலங்கா அரசுகட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி இடம்பெறும் போராட்டத்தில்முக்கிய பங்கு வகித்துவரும் காரணத்திற்காகவே திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

திருமுருகன் காந்தியின் கைதை கண்டித்து இன்றைய தினம்யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றம்சாட்டைமுன்வைத்திருக்கின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலையாழ்ப்பாணத்தின் நகர மத்தியில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும்இனப்படுகொலைகளுக்கு எதிராக தமிழகத்திலும், சர்வதேச அரங்கிலும் நீதி கோரி தொடர்ச்சியாககுரல்கொடுத்துவருவதாலேயே மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டிருப்பதாக இன்று போராட்டத்தில் கண்டனங்கள்தெரிவிக்கப்பட்டன.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!