அதிகாரப் பகிர்வை எதிர்த்தவர்கள் தமிழ்த் தலைவர்களே! “சுமந்திரன்“!

22shares

எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்க இருக்கின்ற சிங்களவர்களின் தீர்மானத்தை, எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களாக இருக்கின்ற தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்றை தினம் மத்துக்கம அகலவத்த பிரதேசத்தில் நடைபெற்றது இதில் பங்கேற்று உரையாற்றிய சுமந்திரன், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான நடைமுறைக்கு அதிகாரப் பகிர்வே ஒரே தீர்வென வலியுறுத்திய அவர், பல்லினங்களைக் கொண்ட நாட்டிற்கு இதுவே சிறந்த ஜனநாயகப் பண்பு எனவும் கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்களின் தீர்மானத்தினைத்தான் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இது அனைவரும் அறிந்தவொரு விடயமாகும். வெவ்வேறுபட்ட மக்கள் குழுவினர் இருக்கின்றபோது பெரும்பான்மையை மையப்படுத்தி தீர்மானங்களை எடுக்கின்றமையானது ஒருபக்கத்திற்கு சார்பானதாகவே சென்று விடுகின்றது.

அதன் காரணமாகவே அதிகாரப்பகிர்வு அவசியம் என்ற தர்க்கம் எழுகின்றது.பல்வேறு குழுவினர் இருக்கின்ற போது சிறுபான்மை குழுவினரின் நிலைப்பாட்டிற்கு மாறாக பெரும்பான்மை குழுவினரை மைப்படுத்தியே தீர்மானங்களை எடுப்பதை ஜனநாயக பண்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.பல்லினங்களைக் கொண்ட எமது நாட்டிற்கு ஜனநாயகப் பண்பு எனக் கூறப்படும் பெரும்பான்மையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துதல் என்பது பொருத்தமற்றதாகவுள்ளது. ஆகவே தான் உலகத்தின் சில நாடுகளில் காணப்படுகின்றமையைப் போன்று அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறான அதிகார பகிர்வினை சமஷ்டி முறைமை என்றும் கூறலாம். இல்லாது விட்டால் சமஷ்டி முறைமை என்று கூறாதும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு அவசியம் என்று முதன்முதலாக முன்மொழிந்தவர் வேறு யாருமில்லை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே. தமிழ்த் தலைவர்கள் எவரும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை.

1926ஆம் ஆண்டுஎஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே சமஷ்டி முறை என்பதை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். டொனமூர் ஆணைக்குழு இந்த நாட்டிற்கு வருகை தந்த போதும் சோல்பரி ஆணைக்குழு இந்த நாட்டிற்கு வருகை தந்தபோதும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரிய தருணத்திலும் சமஷ்டி முறைமை தான் பொருத்தமானது என்று கூறியவர்கள் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தலைவர்கள் அல்லர். இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் அல்லர். கண்டியத் தலைவர்களே ஆவர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன், அதிகாரப் பகிர்வை முதலில் எதிர்த்தவர்கள் தமிழ்த் தலைவர்களே என்ற விடயத்தையும் வலியுறுத்தினார்.எம்.ஏ.சுமந்திரன்1944ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஆட்சிக்கு பொருத்தமானது சமஷ்டி முறைமையே என்று ஸ்ரீலங்கா கம்னியூஸ்ட் கட்சியே அவர்களது வருடாந்த மாநாட்டில் தீர்மானத்தினை எடுத்தார்கள். அக்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1949இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் தமிழ்த் தலைவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

நாட்டின் ஆட்சிமுறை தவறானது பொருத்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டார்கள். அதாவது பெரும்பான்மையினரின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறுபான்மையினருக்கு பாதகமாகும் என்ற தீர்மானத்தினை எடுத்தார்கள். 101 உறுப்பினர்களைக் கொண்ட முதலாவது நாடாளுமன்றத்தில் மலையக மக்களை 7உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்கள். பெரும்பான்மை வாக்கெடுப்பின் காரணமாகவே அவர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இந்த நிலைமைகளை அடுத்து தான் நான் தற்போது பிரதிநிதித்தவப்படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நாட்டிற்கு சமஷ்டி முறைமையே அவசியம் என்ற நிலைப்பாட்டில் பெடரல் கட்சி என எமது கட்சி உருவாக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டில் தான் நாம் தற்போதும் இருக்கின்றோம். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதை நான் தெளிவாக குறிப்பிடுகின்றேன். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். எம்.ஏ.சுமந்திரன் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூட எமது இந்த நிலைப்பாட்டினைக் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் தற்போதைய உலகச் சூழலை கருத்தில் கொள்கின்றபோது சமஷ்டி என்ற பெயர்ப்பலகை போடப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை அனைவருக்கும் புரிந்ததொருவிடயமாகும். பெயர்பலகைகளை உயர்த்திப்பிடித்து யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை. தற்போது எமது நாட்டிற்கு ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயர்ப்பலகை இருந்தாலும் ஜனநாயமும் இல்லை சோசலிசமும் இல்லை.

ஆகவே பெயர்ப்பலகைகளை விடுத்து அரசியலமைப்பின் உள்ளடக்கத்தையே பார்க்கவேண்டியுள்ளது. அங்கு அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய முறைமை இருக்கின்றதா எனப் பார்க்கவேண்டும்.தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆகவே அதிகாரங்களை சரியாக பகிர்கின்றபோது அவர்களுக்குரிய தீர்மானங்களை அவர்களே எடுக்க முடிவதற்கான நிலைமை ஏற்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!