வடக்கு, கிழக்கு கேந்திர பகுதிகளில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தல்!

18shares

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படையினர் எடுக்கும் தீர்மானங்களை சிலர் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்பொழுதும் விசேட காரணியாகக் கருதியே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது எனவும் இதனை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துவருகிறது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக சிலர் கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் குறுகிய அரசியல் லாபம் தேடுவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்த அவர்,

இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதற்கும் அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் முப்படையினர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மழுங்கடிப்பதற்கும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பொது மக்களின் காணிகள் விடுக்கப்படும்போதும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அரசாங்கம் முழுமையாக வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!