தேர்தல் களத்தில் மஹிந்த! தமிழ் மக்களுக்கு உரிமை வழங்க முடியாது திட்டவட்டம்!

122shares

நாட்டைப் பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவற்றை வழங்கவேண்டும், எனினும் இலங்கை ஒரு சிறிய நாடு ஆகவே நாங்கள் நாட்டை பிரித்து சமஸ்டியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான சாத்தியம் முற்றுமுழுதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேசவில்லை பிரதமர் ரணில் சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்கள் கருதினர் எனவும் அந்த நேர்காணலின் போது மகிந்த தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என கேட்கப்பட்ட போது நான் இன்னமும் இது குறித்து தீர்மானிக்கவில்லை நாங்கள் சிறந்த வேட்பாளர் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் அவ்வாறான சிறந்த வேட்பாளர் ஒருவர் கிடைக்காவிட்டால் நானே போட்டியிட வேண்டியிருக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?