காதர் மஸ்தான் நீறணிந்து சந்தனமிட்டு சிவராத்திரி விழாவுக்கு வருவாரா? கொதித்தெழுந்த இந்து மக்கள்!

95shares

இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு இன்று (12.06.2018) முதல் இஸ்லாமியரான காதர் மஸ்தானை துணை அமைச்சராக்கியமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனவும், மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டு சிவராத்திரி விழாவுக்கு வருவாரா? என இந்து சமய ஆர்வலர்கள் கண்டனத்துடனான கேள்விகளை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிப்பதாவது.,

மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டு சிவராத்திரி விழாவுக்கு வருவாரா? ஏனைய சமயத்தவர்களை காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இஸ்லாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலை கொடும் குற்றமாக கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமிய பள்ளிவாயில்களை கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவரை இந்து கலாசார அமைச்சின் துணை அமைச்சராக்குவது இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்து கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயை கருவில் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, மாட்சிமை தங்கிய குடியரசு தலைவரே, இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். நல் ஆட்சி அரசா? இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? என சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமித்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன நிலையில், சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயற்பாடானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தெரிவித்துள்ளார்.

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், 5 பிரதியமைச்சர்களும் இன்றைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய வடமாகாணத்தை சேர்ந்த அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதியமைச்சராகவும், காதர் மஸ்தான் இந்து கலாசார பிரதியமைச்சராகவும் இன்று நியமனம் பெற்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகொத்தவில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கலந்துகொண்டிருந்தனர்.

இந்து கலாசார அமைச்சராக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவிவகித்துவரும் நிலையில், அந்த அமைச்சின் பிரதியமைச்சு பதவியொன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட விடயத்தை தாம் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதன்போது தெரிவித்தார்.

வடிவேல் சுரேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) - இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு, இந்து விவகார பிரதி அமைச்சு பதவியை வழங்க முடியும்? நல்லாட்சியில் ஒரு இந்துவும் இல்லையா குறித்த அமைச்சு பதவியை வழங்குவதற்கு.

இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது, இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும் இதேவேளை, காதர் மஸ்தானும், நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள், எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவார்?” என அவரும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!