வெசாக் தினத்தில் ஏற்பட்ட சோகம்: திடீரென பற்றி எரிந்த வீடு

197shares

ஹட்டன் - ருவான்புர பிரதேசபகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பின்னர் வீடு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், நகைகள், ஆடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!