கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறை- புலம்பெயர் தமிழர்களுக்கு இனி பிரச்சனைகள் குறையும்

359shares
Image

ஸ்ரீலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் இடங்களில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் கும்பல்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் விமானச்சேவை திருத்தம் தொடர்பான சட்டமூல பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தப் பிரேரணையை முன்வைத்து, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றியபோதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

”இந்தக் கும்பல், பயணிகளை அவர்களுடைய நகருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஏமாற்றுகின்ற செயல்பாடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுளன. குறிப்பாக அந்த பகுதிகளில் முச்சக்கர வண்டி கட்டணங்களையும் சட்டவிரோதமாக அதிகரித்துள்ளனர். பயணிகளின் பயணப் பொதிகளும் சில சந்தர்ப்பங்களில் காணாமல் போயுள்ளன. இந்த விடயங்களை கவனத்திற்கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.

இதேவேளை, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க, இத்தகைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கறுப்பு யூலை தடங்கள்…..  முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!