வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் விபத்து -முதியவா் பலி!

3shares
Image

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று(16-05-2018) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வயதுடை ராசன் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியுள்ளாா்.

தற்போது அவரது சடலம் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் வாகனத்தினையும் பொலிஸாா் கைப்பற்றியுள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கறுப்பு யூலை தடங்கள்…..  முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!