வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

4shares
Image

வவுனியாவில் வேலையற்ற பட்டதாரிகள் இன்றையதினம்(16-05-2018) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(16-05-2018) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தா் நியமனத்தின் போது 35 வயதிற்கு மேற்பட்டவர்களை உள்ளீர்க்க வேண்டும், 2017 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியாகி இருக்கும் வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வேலையற்ற பட்டதாரிகளால் கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தனா்.

நியமன இழுத்தடிப்பு மாகாணசபைத் தேர்தலுக்காகவா...?, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே..?, 143 நாள் வீதியில் இருந்தோம் எம் தலைவிதி மாறவில்லை, நியமனம் வழங்குவதை துரிதப்படுத்து., நல்லாட்சி என்ன மெல்லக் கொல்லும் விசமா..?, எமக்கே இந்திலையாயின் எதிர்கால சந்ததியினருக்கு..?, பட்டதாரிகளை தெரிவில் விட்ட நல்லாட்சி, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு.., வெற்றிடங்கள் ஏராளம் பட்டதாரிகள் வீதியோரம்., பட்டதாரிகளின் மீது நீர்த்தாரைப்பரயோகம் நியாயமானதா. போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமக்கான அரச நியமனத்தை வழங்க வலியுறுத்தி யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டமொன்று முன்னெடுத்துள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று(16-05-2018) காலை 10.30 மணிக்கு இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!