மன்னார் மற்றும் நாவலப்பிட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள்!

2shares
Image

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம் புதன் கிழமை(16-05-2018) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டி இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது.

இதன் போது குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர வண்டியை உடனடியாக நிறுத்தி விட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனா்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் என பலர் வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்த போதும் உடனடியாக நீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

உடனடியாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு உதவியை நாடிய போதும் அங்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

சிறிது நேரத்தின் பின் மன்னார் நகர சபையூடாக பௌசர் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரத்தின் பின் தீ அனைக்கப்பட்டது.

எனினும் முச்சக்கர வண்டி முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கின் காரணமாகவே தீப்பற்றியுள்ளதாக தெரிய வருகின்றது.இதனால் குறித்த பாதையூடாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் திடீர் தீ அனர்த்தங்களின் போது நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவசர தீ அணைப்பு சேவைகள் இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், அவசர தீ அணைப்பு சேவை இருந்திருந்தால் குறித்த முச்சக்கர வண்டியை தீயில் இருந்து காப்பாற்றி இருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று(16.05.2018) காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் திடீரென தீப்பிடிக்க ஓட்டுனரும், பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அணைவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த முச்சக்கரவண்டியில் பற்றி தீயை பிரதேசவாசிகள் இணைந்து அணைக்க முயற்சித்தும் பலனளிக்காத நிலையில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!