பெருதோட்டத் துறையில் சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன!

1shares
Image

ஸ்ரீலங்காவின் பெருந்தோட்டத்துறையிலுள்ள மக்களின் சுகாதார வசதிகளை முக்கியப்படுத்தி மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தினை இங்கு தருகிறோம்.

பெருந்தோட்டத் துறையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த துறையின் மனதவள சக்தியில் 90 சதவீதமானவர்கள் பெண்களாவர். இந்த பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மர்களின் போசாக்கு நிலை நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகiயில் மிகவும் தளர்வு மட்டத்தில் காணப்படுகின்றது.

இதனால் தோட்டத்துறையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கி அதற்கான தேவைகளை வழங்க அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது தோட்டத்துறையில் தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் என்ற ரீதியில் 450 நிலையங்கள் தோட்டமுகாமையாளர்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்த மருந்தகங்களை மேம்படுத்துவதன் மூலம் தோட்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாட்டில் ஏனைய கிராம மற்றும் நகர்ப்பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகாதார வசதிகளை இந்த மக்களும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக தோட்டப்பிரதேசத்தில் உள்ள பொதுகமக்களுக்கு இடம்வழங்கும் வகையில் தோட்ட சுகாதாரகட்டமைப்பை அரசாங்கத்தின் சுகாதார கட்டமைப்புடன் ஒன்றிணைப்பதற்கும் இதன் கீழ் தற்பொழுது தோட்ட முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து தோட்ட சுகாதார நிறுவனங்கள் கட்டம் கட்டமாக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது.

இதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!