யாழ் அஞ்சல் அலுவலகங்களுக்கு வாகனங்கள் வழங்கிவைப்பு!

4shares
Image

யாழ்ப்பாணத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்கள் சிலவற்றிற்கு இன்றைய தினம் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண அஞ்சல் துறையை முன்னேற்றும் நோக்கிலேயே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றது.

வடபிராந்திய பிரதி தபாலதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் கலீம் பிரதம வருந்தினராக கலந்துகொண்டு இந்த வாகனங்களை வழங்கி வைத்தார்.

வடமாகாண அஞ்சல்துறையை முன்னேற்றும் நோக்கில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கோரிக்கையின்போரில் 2017ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவில் இந்த வாகனங்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள் பத்து அஞ்சல் நிலையங்களிற்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு பிரதான அஞ்சல் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகளும் இன்றையதினம் வழங்கப்படடுள்ளன.

இதேவேளை, இந்த நிதியில் யாழ் மவாட்டத்திலுள்ள 25 சிறிய தபால் நிலையங்களிற்கென கணணிகளும் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கறுப்பு யூலை தடங்கள்…..  முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!