கிளிநொச்சியில் பாடசாலை செல்லாத சிறுவா்களுக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!

5shares
Image

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட 16 மாணவர்கள்,ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு கிளிநெச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்குச்செல்லாத அல்லது பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீளக்கற்றலில் இணைக்கும் செயற்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோயில் வயல், இயக்கச்சி, வண்ணாங்கேணி ஆகிய பகுதிகளில் நேற்று (15-05-2018) மேற்கொண்ட கள ஆய்வின்போது பதினாறு சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாது கிராமங்களில் காணப்பட்டனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட பதினாறு சிறுவர்களில் பத்துப்பேர் பாடசாலைகள் வரவுகள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய ஆறு சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்பட்டதையடுத்து மேற்படி ஆறு பேரையும் சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் பூநகரிப்பிரதேசத்திலும் பன்னிரண்டு சிறுவர்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டு நான்கு சிறுவர்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!