தமிழகத்திலிருந்து கடல்வழியாக தாயகம் திரும்பிய குடும்பம் கைது!

4shares
Image

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய சகோதரன், சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகள் உள்ளிட்ட நான்கு பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த படகோட்டிகள் இருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை காங்கேசன்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது கைது செய்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த குடும்பமே இதில் கைதாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

குறித்த குடும்பம், கடந்த 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன் பன்னிரெண்டு வருடங்களாக தமிழக இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலுள்ள இடர்பாடுகளால் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டாம் இணைப்பு

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய சகோதரன், சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகள் இருவர் என 4 பேரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த மாதகலைச் சேர்ந்த படகோட்டிகள் இருவரும் வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய குழந்தைகள் உட்பட நால்வரை காங்கேசன்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (16) அதிகாலை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட நால்வரையும் விடுவித்த நீதிவான் கருணாகரன், படகோட்டிகள் இருவரையும் வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!