ஸ்ரீலங்காவின் தெற்கே வேகமாகப் பரவிவரும் வைரஸ் காய்ச்சல்!

4shares
Image

ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில் ஒருவித வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த பகுதியில் ஒருவித காய்ச்சல் வேகமாகப் பரவிவந்தமையையடுத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவானது. இந்த நிலையில் குறித்த காய்ச்சலுக்கு காரணம் ஒருவித வைரஸ் தொற்றே என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”இந்த நிலைமைக்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கறுப்பு யூலை தடங்கள்…..  முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!