உடற்பருமன் கூடியவர்களுக்கு ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் புதிய அறிமுகம்!

209shares
Image

இலங்கையில் மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களுக்கு துரித ஆலோசனை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி சேவையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன்படி அளவுக்கு அதிகமான உடற்பருமனைக் குறைத்துக் கொள்வதற்கு துரித ஆலோசனை வழங்கக்கூடியவகையில் இந்த தொலைபேசி சேவை அமுலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை 24 மணித்தியாலமும் அமுலில் இருக்கும் என்பதோடு இதனை தொடர்பு கொள்ள அழைக்க வேண்டிய இலக்கம் 0710 107 107 என்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனூடாக இலவச ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருத்துவர்களையும், விசேட நிபுணர்களையும் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய சுவசரிய நடமாடும் சுகாதார ஆலோசனை சேவையை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்கள் பணியாக முன்னெடுக்கின்றது.

ஜூன் மாதம் போஷாக்கு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருள் உடல் எடை குறைத்து சரியான வழியில் செல்வோம் என்பதாகும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மக்கள் மத்தியில் அளவுக்கு அதிகமான உடற்பருமன் என்பது சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயது வந்தோர் மத்தியில் சுமார் 17 சதவீதமானோர் உடல் எடைக்கு பொருத்தமற்ற வகையில் அதீத பருமன் மிக்கவர்களாக காணப்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?