தவராசா வீட்டுப் படலையில் கட்டித் தொங்கவிடப்பட்ட பாவப்பட்ட பணம்!

  • Shan
  • June 12, 2018
277shares

பாவப்பட்ட பணம் என சொல்லப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணம் (உறுப்பினர் ஒருவருக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபா) இன்றையதினம் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் வீட்டுப் படலையில் கட்டப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி தவராசாவின் வீட்டுப் படலையில் கட்டியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கேட்டிருந்த நிலையில் கிழக் கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் வடமாகாணசபையினால் நினைவு கூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை, அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறிய எதிர்கட்சித் தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனைக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்தப் பணத்தை வழங்க மாண வர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் என்றும் ஆகவே இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியதுடன் இதுபற்றி எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!