இலங்கையில் மண்ணெண்ணெய் விலை குறைப்பு!

24shares

இலங்கையில் மண்ணெண்ணை விலையைக் குறைப்பதற்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஆகக்கூடிய விலைக்கு அமைவாக நிவாரண விலையின் கீழ் வழங்கப்பட்ட மண்ணெண்ணை விலையை ஓரளவிற்கு அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இதற்குமுன்னர் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், வள்ளங்கள் மற்றும் படகுகளுக்கு எரிபொருளாக மண்ணெண்ணையைப் பயன்படுத்தும் மீனவர்கள், வெளிச்சத்தை பெற்றுக்கொள்வதற்காக மண்ணெண்ணையை பயன்படுத்தும் குறைந்தவருமானத்தை கொண்ட குடும்பங்கள் ஆகியோரால் மண்ணெண்ணெய் விலை குறைப்பு பற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டு 101 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டிருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணை 70 ரூபாவாக குறைப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சராலும், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு ஸ்ரீ லங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!