மட்டக்களப்பு - புல்லுமலையில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிராக பேரணி!

49shares
Image

மட்டக்களப்பு - புல்லுமலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை சரியான கள ஆய்வு மேற்கொள்ளப்படாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை அங்கிருந்து அகற்றுமாறு கோரும் மகஜர்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டமும் பேரணியும் நேற்று முந்தினம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியில்,

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணகரம், இரா.துரைரெட்னம் உட்பட மாநாகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை உடன்தடுத்து நிறுத்து, உன்சொந்த உழைப்பிற்கு எமது நிலத்தினை சோமாலியாவாக மாற்றாதே, மினரல்வோட்டர் கம்பனியால் மிஞ்சப்போவது பாலைவனமே, இயற்கைக்கு உலை வைக்கும் தொழிற்சாலையினை மூடு, எமது வளத்தினை சுரண்டி எவரோ வயிறு வளர்ப்பதா போன்ற சுலோகங்களை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் குறித்த பகுதியில் எந்தவித கள ஆய்வினையும் மேற்கொள்ளாமல், பொதுமக்களின் எந்தவித கருத்துகளும் உள்வாங்கப்படாமல் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகம் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கோ தெரியாமலேயே செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை அங்கிருந்து அகற்றுமாறு கோரும் மகஜர்களும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து தொழிற்சாலைக்கு அனுமதி வளங்கிய அரச நிறுவனங்களிடம் விளக்கம்கோரி இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

Image0

Image1

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!