போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி

16shares
Image

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்’ சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டபோதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அரசினால் நாட்டுக்குள் நிலைமாறு நீதியை நிலைநாட்டுவதற்காக முன்மொழியப்பட்ட பரிந்துரையாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்றை அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையின் அனுமதிக்கு இந்த யோசனையை சமர்ப்பித்த போது, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இந்த பிரேரணையின் மூலம் நிவாரணம் வழங்கப்படக் கூடாது என்று கடும் திர்ப்பை பதிவுசெய்திருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 2015 செப்டெம்பர் மாதம் சிறிலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கொண்டுவரப்பட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள் உறுதிப்படுத்தினர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!