முல்லைத்தீவு நடுக்கடலில் மீனவர் பரிதாப மரணம்

  • Shan
  • July 11, 2018
804shares

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் மீனவர் ஒருவர் தெப்பம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அதிக கடல் கொந்தளிப்பின் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இதில், 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நடுக் கடலில் தெப்பத்தினைப் பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல் கொந்தளிபு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் தெப்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியம் கொந்தளிப்பாகக் காணப்படும் என ஸ்ரீ லங்கா வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!