கூட்டமைப்பு பெயரளவில் மாத்திரமே எதிர்க்கட்சி செயற்படுவதோ அரசாங்கத்தின் அங்கத்தவராக!

10shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையே இன்றும் காணக்கூடியதாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

30 வருடகாலமாக இருந்த யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கு மக்களுக்காக வடக்கின் வசந்தம் எனும் தொனிப்பொருளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவ்வாறான நிலையில் இன்று நாம் இங்கு வந்து பார்த்தாலும் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களினை மாத்திரமே காணக்கூடியதாகவுள்ளதென யாழ்ப்பானத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது தெரிவித்தார்.

அண்மையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் மேலோங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கருத்து முன்வைத்த அவரை 10 கோடி ரூபா வழங்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது பொதுஜன முன்னணிக் கட்சிக்கு அழைப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமடநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எமுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச,

“இது முற்றிலும் பொய்யான ஓர் கருத்தாகும். நாம் தீவிரவாதத்தினை எதிர்க்கின்றோம். 30 வருட யுத்தத்தின் பின்னர் புதிய அரசாங்கத்திடம் கடந்த 2015 ஆண்டு நாம் நாட்டை ஒப்படைத்தோம். எனினும் இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி யெழும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தீவிரவாதத்திற்கு இடமளிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். அதன் காரணத்ததால் நாம் தீவிரவாதத்துடன் இணைந்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம்.

எனினும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கு எதிராக அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர ஆகியொர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உறையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

வடக்கினைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களில் வடக்கிற்கு போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக தெரிவித்தார். தற்போது போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்தள்ளார். இவ்வாறான நிலையில் இவ்வாறு வடக்கிற்கு அரசியல் தலைவர்களின் வாகனங்களினூடாக கட்த்தப்படும் போதைப்பொருட்கள் தொடர்பிலும் அரசாங்கத்தினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.”

அதேசமயம், எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு பங்காளியாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாடினார்.

“முற்றுமுழுதாக தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக உள்ளது. எனினும் நாடாளுமன்டறில் இதுவரை நடைமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வாக்குகளையும் பயன்படுத்தியது இல்லை.

தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருந்த நிவாரணங்களை பட்ஜெட்டிலிருந்து நீக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளித்தது. அதேபோல பசளை நிவாரணம் வழங்கும் போதும், அரசாங்கம் வடக்கு மக்களுக்கான நிவாரணங்களை குறைத்து அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தும் போதும் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவாக வாக்களித்தது.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயருக்கு மாத்திரமே எதிர்க்கட்சியாக செயற்படுகிளன்றது, ஆனால் இருப்பது அரசாங்கத்திலாகும்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் இளைஞர்கள் திருமலையில் வைத்து கேள்வியெழுப்பிய போதும். தனக்கு வேலையற்றவர்கள் தொடர்பில் அரசிடம் பேசமுடியாது மாறாக அரசியலமைப்பு தொடர்பாகவே பேசுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வடக்கின் இளைஞர்களின் சாதாரண வேலையற்ற பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் பேசமுடியாத ஓர் கட்சி எவ்வாறு ஆளும் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக அமையமுடியும்?”

இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!