சிங்கராஜ வனத்தின் யானைகளைத் தடுப்பதற்கான மத்திய நிலையம்!

4shares

உலக மரபுரிமையான சிங்கராஜா பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் தற்போது எஞ்சியுள்ள இரண்டு யானைகளினால் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் வாழும் கிராம மக்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன.

இதன் அடிப்படையில் யானைகளின் பாதுகாப்பு போன்று கிராம மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்புக்கென துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக இரண்டு யானைகளுக்காக தடுப்பு மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் இவற்றுக்கு பொருத்தமான சுற்றாடலுடன் கூடிய களவான தோலே கந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் பாருகள என்ற இடத்தில் உள்ள சுமார் 36 ஹெக்ட்டர் நிலப்பரப்பை சுவிகரிப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி நிலைபெறா அபிவிருத்தி வனவிலங்குகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்மாஸ்ட்டர் சரத் பொன்சேகா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!