20 இல் ஜனநாயகம் காக்கப்படுமா?

7shares
Image

தற்போதைய தேசிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து அரசியல் சூழலில் குழப்பநிலைகள் வெவ்வேறு விதங்களிலும் உருவெடுத்து வருகின்றன.

யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீதிருந்த வேறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் தற்போதைய மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

அவ்வாறு ஆட்சிப்பொருப்பை ஏற்றுக்கொண்ட போதிலும் அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரத்தில் சில விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இனிவரும் அரச தலைவர்களும் பதவியில் இருந்துக்கொண்டு தமது அதிகாரங்களை குறைக்கும் முயற்சிக்கு பங்களிப்பர் என்பது சந்தோகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.

இவ்வாறிருக்க தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை பாராட்டவேண்டிய விடயமாகக் கருதப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படவுள்ள இந்த சிர்திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களும் ஒன்றாக இருந்துக்கொண்டு தற்போதைய அரசாங்கத்திக்கு எதிராக செயற்படுகின்றனர்.

இது ஜனநாயகத்திற்கு சாதகமான விடயம் என்பதைக் கருத்திற்கொண்டு முன்னெடுபக்கப்படும் செயற்பாடா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

இவ்வாறு புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் எழுந்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியால் இந்த 20 ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ் சமுதாயத்தைப் பொருத்த வரையில் தமக்கு விடிவு பிறக்கவில்லை எனக் குறிப்பிடும் சமூகம், அதற்கான மாற்றுவழிகளை முன்னெடுப்பது தொடரிபிலும் சற்று சிந்திக்கவேண்டும்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தமானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழித்து நாடாளுமன்ற ஆட்சியை நிலைநாட்டுவதற்கான பாரிய முயற்சியாக காணப்படுகின்றது.

இதன்மூலம் ஜனாதிபதிக்கு தற்போது காணப்படக்கூடிய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதோடு பிரதமரின் ஆலாசனையின் பேரில் அவர் செயற்படுவதற்கான சூழல் உருவாகும்.

இது ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டும் குறைக்கும் செயற்பாடாக நாம் கருதாமல் அரசியலமைப்பில் ஏற்படும் பாரிய மாற்றமாக கருதவேண்டும்.

அதாவது தற்போதுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு நாடாளுமன்ற ஆட்சிமுறை என்ற ஒரு புதிய அரசாங்க முறையின் கீழ் இந்த நாடு கொண்டு செல்லப்படும்.

இதில் தன்னிச்சையான செயற்பாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு, அரசாங்கம் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்டயத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்களின் கேள்விகளுக்கு கூட்டுப்பொறுப்புடன் செயலாற்றவேண்டிய கட்டாயப்பாடு காணப்படுகின்றது.

வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கோ, உடன்படிக்கைகளுக்கோ ஒரு தனிநபர் அல்லது குழுவொன்று தன்னிச்சையான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால் பல்வேறுபட்ட கலந்துரையால் மற்றும் விவாதத்திற்கு மத்தியில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படுவதால் ஜனநாயகம் காக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்கள் பிரதிநிதிகள் கட்சிசார்பாகவோ தனிநபர் சார்பாகவோ செயற்படுவது கட்டுப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும் தமது மக்கள் பிரதிநிதிகள் எதிர்கால மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படும் ஆற்றல் உள்ளவர்களா என நன்கறிந்து தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவேண்டியது கட்டாயப்பாடு.

எனினும் அயல் நாட்டு அரசியல் மற்றும் சினிமா மோகம் அதிகரித்து காணப்படுவதால் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பதே அரசியல் என எண்ணும் சில கூட்டங்களும் நாடாளுமன்றத்தினுள் பாசாங்குக் காட்டி நுளைந்துவிடுகின்றது.

எவ்வாறாயினும் தமது சுய இலாபத்தை கருத்திக்கொள்ளாமல் செயற்படும் தலைவர்களை தெரிவு செய்யவேண்டியது ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்ற அவாவுடன் செயற்படும் மக்களாகிய எமது பொறுப்பாகும்.

அதிகாரம் தனிநபரிடமிருந்து, பரவலாக்கப்படுவதன் மூலம் ஜனநாயகம் காக்கப்படும் என்பதே சாராம்சம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!