வடமாகாண சபை உறுப்பினர்களின் வழக்கு விசாரைணையின் போது நில சுவீகரிப்பு போராட்டக்காரர் கைது!

9shares

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா கடற்படையினருக்காக மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை கைதுசெய்ய வேண்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக பொது மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்பிற்காக காணிகளை அளவீடு செய்யச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 22 காணி உரிமையாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

.

மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நில அளவை திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தின் கண்ணாடியை உடைத்த விவகாரத்தில், பொது சொத்து சொத்திற்கு சேதம் விளைவித்ததாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட து.

அத்துடன் வீதிகளை மறித்து நில அளவை திணைக்கள அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் து.ரவிகரன் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு பொலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான து. ரவிகரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் து. ரவிகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை முன்பிணை கோரியிருந்த வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மேலும் சிலரை கைதுசெய்ய வேண்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதற்கான கால அவகாசத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிய நிலையில், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 2019 தை மாதம் 7ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!