சர்வதேச சமூகமே தீர்வினை பெற்றுத்தர வேண்டும் முல்லைத்தீவில் போராட்டம்!

4shares
Image

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர அலுவலகத்தை ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புறக்கணித்துள்ள நிலையில் அரசாங்கம் ஏன் அதனை திணிக்கின்றது என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் கிடைக்கமாட்டார்கள் என்ற செய்தியை அரசாங்கம் வழங்குகின்றதா எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும்,கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என பதில் வழங்குமாறு கோரி தமிழ் தாயகப் பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

மருதங்கேணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிளநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டம், 500 நாட்களை கடந்த நிலையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சூழலில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து போராட்டத்தை ஆரம்பித்த மக்களது போராட்டம் எந்த தீர்வுக்களுமின்றி இன்று 499 ஆவது நாளாக இடம்பெற்றுவருகிறது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு நேற்றைய தினம் மத தலைவர்கள் பலர் வருகைதந்து அவர்களுடைய நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இந்த நிலையி்ல் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நாளை 500 ஆவது நாளை எட்டவுள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தினார்கள்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமுகமே தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 500 ஆவது நாளை எட்டவுள்ள நிலையில் நாளை 18 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!