கறுப்பு யூலை தடங்கள்….. மீசாலையில் புலிகள்- குருநகரில் சரத்முனசிங்க

  • Prem
  • July 17, 2018
445shares

விடுதலைப்புலிகளின்சீலன் குழு காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இருந்து எக்ஸ்புளோடர் எனப்படும் வெடிக்கவைக்கும் கருவிகளில் 5 கருவிகளை எடுத்துச் சென்றதையடுத்து சிறிலங்கா புலனாய்வுமையம் உள்ளக ரீதியில் சிவப்பு எச்சரிக்கை நிலையடைந்தது. இதன் பின்னர் விரைவான நடவடிக்கையில் படைத்தரப்பு குதித்தது

விடுதலைப்புலிகளின் கைகளில் சிக்கிய மேற்படி 5 வெடிகருவிகளாலும் தமக்கு பெரும்பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதால் புலிகளின் மறைவிடங்களை இலக்கு வைத்து படையினர் தமது தேடுதல் வேட்டைகளை முடுக்கிவிட்டனர்

இந்த நிலையில்தான் மீசாலை-கச்சாய் வீதியிலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதான இரகசியத் தகவலொன்று கொடிகாமத்தில் இருந்த சிறிலங்கா காவற்துறைக்கு கிடைத்திருந்தது.

இந்ததகவலைப்பெற்ற கொடிகாமம்காவற்துறை அதனை உடனடியாகவே குருநகரிலுள்ள புலனாய்வுமையத்திடம் வழங்கியது.


இதனையடுத்து சுறுசுறுப்படைந்த குருநகர்முகாமின் அப்போதைய பொறுப்பதிகாரியான சரத்முனசிங்கா குறிப்பிட்ட அந்த தென்னந்தோட்டத்தை மையப்படுத்திய அதிரடி ஒன்றுக்குத் தயாரானார்.

இதற்காக அப்போது யாழ்ப்பாணத்தின் பிரிகேடியராக இருந்த லயல் பல்தாசாரிடம் மேலதிய இராணுவ உதவியையும் அவர் கோரியிருந்தார் .

சரத்முனசிங்கா கோரியபடி இராணுவஉதவியை வழங்க சம்மதித்த லயல் பல்தாசார் 12 பேரடங்கிய அதிரடி படைப்பிரிவு ஒன்றையும் அதற்கு மேலதிகமாக இளநிலை அதிகாரி உட்பட்ட 6 படையினர் குழு ஒன்றையும் வழங்கியிருந்தார்.

ஆனால் வழமைபோல இராணுவவாகனங்களில் படையினர் தேடுதல் வேட்டைக்குச் சென்றால் புலிகள் உசாரடைந்து தம்மீது தாக்குதலை தொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தனது வியூகத்தை சற்று வித்தியாசமாக மேற்கொள்ள முடிவு எடுத்தார். சரத்முனசிங்கா.

சரத்முனசிங்கவின் திட்டமிடலின் அடிப்படையில் இரண்டு படையினர் விடுதலைப்புலிகளைப் போல் உடை அணியச்செய்யப்பட்டனர்.

அவ்வாறு “பெடியள்” வேடம் போட்டவர்கள் போல யாழ் மணிக்கூட்டு கோபுர பகுதியில் காத்துநின்றனர்

அதன் பின்னர் அந்த வழியால் வெறுமையாக வந்த மினிபஸ் ஒன்றை கடத்தும் படி தனது ராணுவ பெடியளுக்கு உத்தரவிட்டார் சரத்முனசிங்கா.

ஆதன் பின்னர் அதிரடியாக காரியங்கள் நடந்தன. தமது வாகனத்தை மறித்து அதில் திடிரென ஏறியவர்கள் உண்மையில் பெடியள் தானா என மினிபஸ் சாரதியும் அவரது உதவியாளரும் சுதாகரிக்க முன்னரே அவர்கள் இருவரும் மடக்கப்பட்டு வாகனத்துக்குள் கட்டிப்போடப்பட்டனர்.

மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அருகே நடந்த இந்த வாகனக்கடத்தலை நேரடியாக கண்ட சில பொதுமக்களும் வாகனத்தில் ஏறிய படையினரையும் போராளிகள் எனவே நினைத்திருந்தனர்.

மணிக்கூட்டு கோபுரப்பகுதியில் கடத்தப்பட்ட மினிபஸ் நேராக குருநகர் ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. வாகனச்சாரதியும் உதவியாளரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் மாலை 3.30 மணியளவில் சிவில் உடைஅணிந்த படையினருடன் அந்த வாகனம் மீசாலையை நோக்கிச் செலுத்தப்பட்டது.

யூனிபோர்ம் இல்லாமல் சாதாரண உடைக்குமாறிய சரத்முனசிங்கா தானே சாரதியாக மாறினார். வாகனத்தை மிகவேகமாக செலுத்திச்சென்றார்.

இந்த மினிபஸ்சை சுமார் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில் படையினரின் இன்னொரு வாகனம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டுவாகனங்களுக்கு இடையில் இரகசியமாக வானொலி தொடர்பாடல் இருந்தது

மீசாலை சந்தியை அடைந்த வாகனம் அதன்பின்னர் கச்சாய் வீதியால் செலுத்தப்பட்டது.

அப்போது அந்த வழியால் வந்த பொதுமக்களில் 2 பேரை மடக்கிய படையினர் தாம் தேடிச்செல்லும் தென்னந்தோட்டப்பகுதியை சரியாக இனங்காட்டுவற்காக அவர்களையும் பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

ஆயினும் சரத் முனசிங்காவால் கொண்டு செல்லப்ட்ட மேற்படி இருவருக்கு கூட விடுதலைப்புலிகளின் அன்றைய தென்னந்தோப்பு மறைவிடத்தை சரியாக இனங்காட்ட முடியவில்லை.

தமக்கு கிடைத்த தகவல் பொய்யானதோ என எண்ணிஏமாற்றமடைந்த சரத்முனசிங்கா தனது வாகனத்தை நேராக கடற்கரைப்பகுதிக்கு செலுத்தினார்.

நேரம் மாலை 6 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. தனது தென்னந்தோப்பு தேடுதல் வேட்டை தோல்வியில் முடிவடைந்து விட்டதென்ற முடிவுடன் மீண்டும் குருநகருக்கு திரும்பமுடிவெடுத்தார் சரத் முனசிங்கா.

வந்தபாணியில் ஒரு கிலோமீற்றர் இடைவெளி விட்டு படையினரை தொடருமாறு பணித்திருந்தார்.

சரத்முனசிங்கா குழு மீண்டும் குருநகருக்கு திரும்பிய போது கொண்டாமூலை பகுதியில் ஒரு காட்சி தென்பட்டது. இரண்டு சைக்கிள்களில் 3 மூன்று இளைஞர்கள் சென்றுகொண்டிருக்கும் காட்சி அது.

சமாந்திரமாக சென்று கொண்டிருந்த இந்தசைக்கிள்களை செலுத்திய இருவரும் ராணுவசாயலை ஒத்த ரீசேட்டுகளை அணிந்திருப்பதைக்கண்டுவிடடார் சரத் முனசிங்கா. அவரது மூளையில் ஏதோபொறிதட்டியது.

வாகனம் இளைஞர்களை அண்மித்தது அந்த இளைஞர்களிடமும் ஆயுதங்கள் இருப்பதை கண்டார் சரத்முனசிங்க. தனது வாகனத்தை அவர்களுக்கு அருகே திடீரென நிறுத்தினார். இந்த சடுதியான நிகழ்வை இளைஞர்கள் கண்டுவிட்டனர்.

சுதாகரித்துக்கொண்ட அவர்களும் அருகிலிருந்த வேலிக்கு மேலால் பாய்ந்தனர். உண்மையில் புலிப்பாச்சல் இது.

இளைஞர்கள் பாய்ந்தோடுவதை கண்டுகொண்ட சரத் முனசிங்கவின் வாகனத்திலிருந்த படையினரில் இருவர் வாகனத்தில் இருந்து பாய்ந்து இளைஞர்களை நோக்கி சுட்டனர்.

இளைஞர்களும் பதிலுக்குச் சுட்டனர்.. இருதரப்பின் துப்பாக்கி வேட்டுக்களால் முன்னிரவிற்குள் மூழ்கிக்கொண்டிருந்த மீசாலைப்பகுதி அதிர்ந்தது!அதன் பின்னர்…

கறுப்புயூலைத் தடங்கள் தொடரும்….….

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!