தொடர்கதையாகும் குற்றச்செயல்கள்! அச்சுவேலியில் சம்பவம்!

16shares
Image

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் அச்சுவேலி பத்தமேணியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 10.30 இற்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றிருக்கின்றன.அதாவது மோட்டார் சைக்கிலில் கம்பிகள் பொல்லுகள் சகிதம் முகத்தை மறைத்தவாறு குறித்த வீட்டிற்குள. நுழைந்த இனந்தெரியாத குழுவினர் முதலாவதாக வீட்டின் வெளிக் கதவை அடித்து உடைத்து வெட்டிச் சேதப்படுத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குழுவினர் வீட்டின் கதவு ஐன்னல்கள் மற்றும் கதிரை மேசை. குளிர்சாதனப்பெட்டி என அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

ஆயினும் குறித்த குழுவினர் தாக்குதலை மேற்கொள்ள வந்துள்ளதை அறிந்த கொண்ட வீட்டில் இருந்தவர்கள் அந்தக் குழுவினர்களிடம் பிடிபடாதவாறு பாதுகாப்பாக தப்பித்துக் கொண்டனர்.

இந் நிலையில் இனந்தெரியாத இக் குழுவின் அட்டகாசங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழில் இளைஞர் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகருத்திருப்பதாகவும் அதனைக் கட்டுபடுத்துவதற்காகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் சில தினங்களிற்கு முன்னர் யாழ் வந்திருந்தனர். அது குறித்து யாழில் அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கையிலையே கொடிகாமத்துல் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையிலையே நேற்றைய தினம் இச்சுவேலியிலும் இந்த அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தொடரும் சம்பவங்கள் பொது மக்கள மத்தியில் அச்சத்தை ஏற்படித்தியிருக்கின்றன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!