இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்ட பொட்டலங்கள்!

25shares
Image

இலங்கைக்கு கடத்துவதற்க்காக சீனியப்ப தர்ஹா கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் மதிபுள்ள கேரளா கஞ்சா கீயூ பிரிவு போலீஸாரால் பறிமுதல செய்யப்பட்டது, கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு போலீஸார் ராஜ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்து, இதனையடுத்து இராமேஸ்வரம் துனை கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் கடற்கரை பகுதிகளில் போலீஸார் தீவிர சோதணை நடத்தினர்.

அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகன்,ஜெயகனேஷ,கீத்தீஸ்வரன் ஆகிய மூவரை பிடித்து விசாரனை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்க்காக சீனியப்பா தர்ஹா கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அப்பகுதியை தோண்டிய போலிஸார் 152 கஞ்சா பெட்டலங்கலை கைப்பற்றினர் கைப்பற்றப்பட்ட கஞ்சா பெட்டலங்களில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா இருந்தது அதனை கைபற்றிய போலிஸார் கடத்தல்காரர்கல் மூவரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரண நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கேராள கஞ்சாவின்; சர்வதேச மதிப்பு 50 லட்சம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமிபகாலமாக ராமநாதபுரம் கடலோரப்பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பாக இந்த வராத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மற்றும் 50 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் தமிழக மற்றும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?