அமெரிக்காவுக்கு ஈரானின் பதிலடி!

  • Shan
  • July 18, 2018
29shares

யுரேனிய செறிவூட்டலை அதிகரிப்பதற்கு தமது நாடு தயாராகவுள்ளதாக ஈரானின் அணு சக்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான பேச்சுக்கள் தோல்வி அடையும் பட்சத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தயாராகிவருவதாக ஸ்தாபனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவான பொறுப்புக்களை நிறைவேற்றவும் அமுல்படுத்தவும் தமது நாடு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அதிகாரம் மிக்க ஆறு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் தனது அணுத் திட்டங்களை மட்டுப்படுத்த ஈரான் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளும் தளர்த்தப்பட்டிருந்தன.

எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் வெளியேறியிருந்த நிலையில், அந்த உடன்படிக்கையின் நீடித்த தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

அத்துடன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தடைகளை அமுல்படுத்தியுள்ள நிலையில், யுரேனிய செறிவூட்டலை அதிகரிக்கப் போவதாக ஈரான் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?