நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கிலான கலந்துரையாடல்- சம்பந்தன்,பெல்ஜியம் குழுவினர்!

20shares
Image

தமிழ் மக்கள் தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்காமையால் விரக்தி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையெனவும் இரா. சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள பெல்ஜியம் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது எல்லோரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதனை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை நாட்டின் பன்முகத்தன்மையையும் பல இனங்களையும் அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று ஒரு வரைபு யாப்பானது இன்று வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் எடுத்துக் காட்டினார்.

இந்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனையும் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் வகையில் நிலவும் சூழ்நிலைமையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய அரசியல் யாப்பானது இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன், நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டு செல்வதா? அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா? என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும் என குறிப்பிட்டார்.

நாட்டினை முன்னேற்றமான ஒரு பாதையில் இட்டு செல்ல வேண்டுமானால் ஒரு புதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என்றும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

அதேவேளை, அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலம் வாழ்ந்த நிலங்களை இராணுவத்தினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

மேலும் தங்கள் அன்புக்குரியர்வர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறிவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் நாட்டு மக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்த கூடிய நடவடிக்கைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்