தமிழ் மக்களை பாதிக்கும் எந்த அபிவிருத்தியும் அம்பாறையில் அனுமதிக்க முடியாது- கோடீஸ்வரன் எம்.பி

44shares
Image

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு திட்டமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தற்போது தமிழ் மக்கள் அபிவிருத்தியையும் எதிர்பார்த்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸனிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று அம்பாறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

யுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள் மற்றும் பின்னடைவுகள் அதில் இருந்து மீண்டெழும் வகையில் வழங்கப்பட வேண்டிய வாழ்வாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விளக்கியுள்ளார்.

இதேவேளை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு திட்டமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என குறிப்பிட்ட அவர் இதனால் கடந்த காலத்தில் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியினை முன்கொண்டு செல்லமுடியாமல் போனதையும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் தற்போது தமிழ் மக்கள் அபிவிருத்தியையும் எதிர்பார்த்துள்ளனர் எனவும் கூறினார்.

குறிப்பாக கல்வி, சுகாதாரம். வேலை வாய்ப்பு. வாழ்வாதாரம். குடிநீர் வசதி, என பல விடயங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் உதவிகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனால் குறித்த விடயங்களை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கலந்துரையாடலின்போது அம்பாறை மாவட்டத்தின் அரசியல் நிலைப்பாடு சமூக, கலாசார, பொருளாதார விடயங்கள், யுத்தத்திற்கு பின்னர் இனங்களிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பிலும் இனங்களிடையே காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் விளக்கியுள்ளார்.

மக்களை பாதிக்கும் எந்த அபிவிருத்தி திட்டங்களையும் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த தாம் ஒருபோதும் அனுமதிக்கப்பபோவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த விடயங்களை கவனம் செலுத்துவதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், தமது நீண்ட கால வேலைத் திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!