கிளிநொச்சி மக்களை அடுத்தடுத்து உலுக்கிய துயரம்; இதற்கு முடிவேயில்லையா? ஒரு சிறப்பு பார்வை!

143shares

13 வருடங்களுக்கு பின் வந்த அரசியல் கைதி ஒருவர் 3 பிள்ளைகளை கட்டியணைத்து அழுத மற்றுமொரு சோகம் இன்று (20.07.2018) கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார்.

கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமாரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்த போது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.

இதே போல் ஒரு சம்பவம்தான் அன்றும் கிளிநொச்சியில் நடந்தது..

கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவியும், இரண்டு பிள்ளைகளின் தாயுமான ஆனந்த சுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்தார்.

தனது கணவரை மீட்டெடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்ததினால் ஏற்பட்ட விரக்தி வறுமை மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான ஏக்கம் என்பவை இவ் இளம் தாயை நோயில் தள்ளி காவு வாங்கியது.

அப்போது ஆனந்த சுதாகரனுக்கும் இதே ஒருமணிநேரம்தான் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அப்போது ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நிலையை நினைத்து ஒட்டு மொத்த தமிழர்களும் கண்கலங்கினார்கள்.

அநாதரவாக நிற்கின்ற இரண்டு குழந்தைகளின் நிலையை கருத்திற்கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் பல்வேறு வழியில் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி மைத்திரி உங்கள் தந்தையை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இது வரையில் எதுவுமே நடக்கவில்லை.

இந்நிலையில்தான் தற்போது தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதியின் தந்தை இறந்த சம்பவமும் மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு தமிழ் அரசியல் கைதி ஒருமணி நேரம் அவர் வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்றால் குடும்பத்தில் ஒருவர் இறக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் தற்போதைய மைத்திரி அரசை உருவாக்குவதற்கு தமிழர்கள் பெரும் பங்களிப்பை செலுத்தியும் தமிழர் தரப்புக்கு எந்தவித பலனும் இல்லை என மேலும் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்