கறுப்புயூலை இனச்சங்காரம் 35 ஆண்டுகள்……

  • Prem
  • July 23, 2018
56shares

1983 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் யூலை 23 ஆந்திகதியான இன்றுஇரவு ஒரு கண்ணி வெடித்தாக்குதல் இடம்பெற்றபின்னர் மறுநாள் அதிகாலை தமிழ்மக்களுக்குகறுப்பு யூலையுடன் விடிந்தது.திருநெல்வேலி தாக்குதலால் தான் 83 கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகபொதுவாக கூறப்படுகிறது.ஆயினும் உண்மையில் இந்த தாக்குதலை ஒரு காரணமாக வைத்து ஏற்கனவேதிட்டமிட்டபடி கொழும்பு உட்பட்ட பகுதிகளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சிறிலங்காவின் ஆட்சி அதிகார மேலாதிக்க அனுசரணையுடன் திட்டமிட்டவன்முறைகள் 1983 இல் தான் முதன்முறை வெடிக்கவில்லை.

அதற்கு முன்னரும் 1956-1958-1974-1977 என ஆண்டாண்டுகாலம் அவ்வப்போதுதமிழ்மக்களுக்கு எதிராக அவை வெடித்திருந்தன.


ஆயினும் 83 இல் வெடித்த இந்த கறுப்புயூலையின் நாசகாரம் இலங்கையின்வரலாற்றில் மிக ஆழமாக பதிந்ததமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவே போர்என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என தமிழ்மக்களை பார்த்து உச்சக்கட்டமாக முழங்கியிருந்தார்.


கறுப்பு யூலை வன்முறைகளில் கொழும்பு உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டதமிழமக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அழிக்கபட்டு பல்லாயிரம்கோடி சொத்தழிவு ஏற்பட்டது. பல்லாயிரம் பேர் ஏதிலிகளாக்கப்பட்டனர்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் கணக்கில் கறுப்பு யூலையில் கொல்லபட்டதமிழ்மக்களின் தொகை வெறும் 358 பேர் மட்டுமே.

இப்போது 35 வருடங்களுக்குப்பின்னர் இலங்கைக்கு இன்னொரு கறுப்புயூலைநினைவு வந்திருக்கிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்