போராட்ட வடிவம் மாறியதேயன்றி அது ஒருபோதும் நிறுத்தப்படவில்லை!

  • Shan
  • July 23, 2018
8shares

உறவுகளை தேடும் போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டதேயன்றி போராட்டம் நிறுத்தப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அண்மையில் ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டதன் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது வவுனியா, முல்லைத்தீவு, திருகோணலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒரு வருடத்தையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் கடந்த 18 ஆம் திகதி 500 ஆவது நாளை எட்டியிருந்தது.

500 ஆவது நாள் நிறைவையொட்டி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாதமொருமுறை இந்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக கூறியிருந்தனர்.

எனினும் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகமொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அலுவலக கட்டடத்தில் இன்று 505 ஆவது நாளாகவும் மக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தில் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது போராட்டம் நிறுத்தப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!