வடக்கு இராணுவ முகாம் தொடர்பில் வெளியான தகவல்

220shares

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என வெளியாகியுள்ள அடிப்படையற்ற பிரசாரங்கள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் சில பத்திரிகைகள் இவ்வாறான தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்க பத்திரிகைகள் முன்வர வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்

வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க;

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து வடமாகாண ஆளுநரிடமும் இராணுவத் தளபதியிடமும் தான் விசாரித்ததாகவும் அப்படியான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் கூறினார்.

வட மாகாணத்தில் கல்வியை முன்னேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் சில வருடங்களுக்குள் வடக்கிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துக் கொண்டு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு விஜயம் செய்த அவர் அம்மாவட்டங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் யாழ் மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சினையாக உருவெடுத்திருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களையும் வழங்கி வைத்தார்.

கிளிநொச்சிக்கு வருகை தந்த பிரதமர் அரசாங்கத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்றிட்டமான கம்பெரலிய வேலைத்திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார். இதற்கான நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இடம் பெற்றது. அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன் ஹர்ஷ டி சில்வா வட மகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்திய அரசாங்கமானது இலங்கையில் இலவச அம்பியுலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கைக்கு அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு யாழ்.நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இச் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார் அதனையடுத்து இடம்பெற்ற தேசிய தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்விலும் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதேவேளை என்டர்ப்ரைசஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆரம்பித்துவைத்த பிரதமர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் இடம்பெற்ற வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களையும் வழங்கினார். வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்ட பெண் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வைபவத்திலும் பிரதமர் கலந்துகொண்டார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன் ஹர்ஷ டி சில்வா வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பலரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!