பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு மீண்டும் விளக்கமறியலில்

7shares

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் சீனி கூட்டுத்தாபனத்திற்கு சொத்தமான பங்கின் ஒரு பகுதியை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கும் பொருட்டு குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய் கோரிய நிலையில், அதன் முற்பணமாக 2 கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்றதாக ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள தலைவர் பி.திஸாநாக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த இவரும் கடந்த மே மாதம் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமக்கு பிணை வழங்குமாறு கோரி ஐ.கே.மஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோர் உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதன விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதிமன்ற பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிணை மனுக்கோரிக்கையை நிராகரித்த நீவவான், இருவரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!