மூன்றரை மணி நேர விசாரணையில் விஜயகலா கூறியது!!!

266shares
Image

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று (24) சிறிலங்காவின்திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ் வீரசிங்கம்மண்டபத்தில் யூலை 2 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சிறுவர் மற்றும் மகளீர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த உரைக்கு எதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததை அடுத்து சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்பதவியையும் இராஜினாமா செய்ய விஜயகலா மகேஸ்வரனுக்கு நேரிட்டது.

இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் நேற்றைய தினம் சர்ச்சைக்குரிய வீரசிங்கம் மண்டப உரை தொடர்பில் சுமார் மூன்றுமணித்தியலாங்களுக்கு மேல் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

விசாரணையில் விஜயகலா,

தான் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சி குறித்தே மேடையில் பேசியதாகவும் ஒரு போதும் விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயற்படுபவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த வார்த்தை பிரயோகத்தை கூறிய காலத்தில் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களால் ஏற்பட்ட மன சோர்வினாலும், விரக்தியினாலுமே அவ்வாறன வார்த்தைப் பிரயோகம் தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விட்டதாகவும் கூறியதாக விசாரணை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் தனது பேச்சு, ஊடகங்களில் ஒலிபரப்ப பட்டதன் பின்னரே தனது வார்த்தைப் பிரயோகங்களின் பாரதூரத்தன்மையை உணர்ந்ததாகவும் விஜயகலா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியதற்காக அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியஅமைப்பாளரான நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

அது மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையிலான விசேட குழுவொன்றும் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் கட்சிமட்டத்திலான விசாரணையொன்றையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!