மன்னார் புதைகுழிக்கு காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் விஜயம்!

  • Shan
  • July 25, 2018
14shares

மன்னார் சதொச விற்பனை நிலையத்தில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டுள்ளார்.

ஆணையாளர்களான மிராக் ரஹீம் மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரே மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மேற்பார்வை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் சதொச விற்பனை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியை அகழும் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் இன்று 41 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரனின் மேற்பார்வையில் இடம்பெறும் அகழ்வு பணிகளை விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான சட்ட மருத்துவ அதிகாரிகளும் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் ராஜ் சோம தேவ மற்றும் அவரின் குழுவினரும் இணைந்துமேற்கொண்டுள்ளனர்.

இந்த அகழ்வுப் பணிகளின் போது தொடர்ச்சியான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை விஸ்தரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது சிறு பிள்ளையொன்றின் மனித எச்சமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறு பிள்ளையின் எச்சமானது வயது வந்த ஒருவருடைய இரண்டு கால்களுக்கும் இடையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 தொடக்கம் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளையொன்றின் மனித எச்சமாக இது இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது 52 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 33 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டுள்ளதாக இந்த அகழ்வுப் பணிகளுடன் தொடர்புபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதி செய்யப்பட்ட மனித எச்சங்கள் பாதுகாப்புக் கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர்களான மிராக் ரஹீம் மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் இன்றைய தினம் மனித எச்சங்களை அகழும் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ஏற்கனவே மன்னார் திருக்கேதீச்சரம் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதில் 100க்கும் அதிகமான மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!