தமிழர்கள் மாத்திரமல்ல இராணுவத்தினரும் சித்திரவதைக்கு உள்ளானார்கள் மஹிந்த சமரசிங்க

11shares

தமிழர்கள் மாத்திரமல்ல ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான துறைமுககங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியிலும் தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டு மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையிலேயே அமைச்ர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை முன்வைத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சார்பான முன்னைய ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்காவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும் தற்போதைய தறைமுக அமைச்சருமான மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டார்.

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய தினமும் 41ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

நல்லிணக்க செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற வேளையில் வடக்கில் இவ்வாறு மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் தென்னிலங்கையில் அதுகுறித்த கருத்துக்களோ அல்லது அவதானமோ செலுத்தப்படாதிருப்பது தொடர்பாக ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

(‘அது தொடர்பான விசாரணைகள் நடைபெறும். அவற்றை மூடிமறைக்கப்போவதில்லை. எனினும் நல்லிணக்கம் என்று கூறும்போது இருதரப்பும் காணப்படுகிறது. அங்கு கண்டுபிடிக்கப்படுகின்ற மனித எச்சங்கள் மட்டுமல்ல, எமது இராணுவத்திலும் எத்தனை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளார்கள். எத்தனை பேர் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் தெரியுமா. அந்தப் பக்கத்தையும் நாங்கள் பார்க்க வேண்டும். நல்லிணக்கம் என்பது இரண்டு தரப்புக்களைக் கொண்டதாகும். வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற நல்லிணக்கத்தையே இங்கு தென்னிலங்கை மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். இதன்படியே நல்லிணக்கத்தை அமுல்படுத்துவதற்காக நாங்கள் கடமைபட்டிருக்கின்றோம்”)

இதேவேளை ஒரு வருடத்திற்கு முன்னர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன் யூலை 23ஆம் திகதியான நேற்று முன்தினம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் வைத்து புதிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதில் சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை ஒடுக்க தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து சிறிலங்கா அரசு மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை சுமத்தியுள்ளார்.

சித்திரவதைகளும், மோசமாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் நாளாந்த நிகழ்வுகளாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 2016 ஆம் ஆண்டு இறுதி முதல் அண்மையக் நாட்கள் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் நூற்றுக்கு 80 வீதமானோர் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சித்திரவதைகள் தொடர்பில் முறையிட்ட போதிலும் அந்த முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தயாரில்லை என்றும் எமர்சன் கவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான ஆட்சியில் குறைந்த பட்சம் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்க உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா சிறப்பு பிரதிநிதி பென் எமர்சன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிய பென் எமர்சன், குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட சம்பவங்களை ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவம், பொலிஸ் உட்பட சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைகளையும் பென் எமர்சன் தனது புதிய அறிக்கையில் இணைத்துள்ளதுடன், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்தச் செய்யுமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!