கீத் நோயர் மீதான தாக்குதல் : அவுஸ்ரேலியா சென்ற விசேட குழு

11shares

ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்த குழுவில், இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் ஆகியோர் உள்ளடங்குவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“த நேசன்” பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகின்ற ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்திருந்தது.

தொடர்ச்சியாக பிணைமனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மெல்பர்னில் வசித்துவரும் கித்நோயரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்மூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த குழுவினர் அங்கு சென்றுள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!