வல்வைப்படு கொலையின் ஆறா வடு நினைவு தினம் இன்று!

33shares
Image

வல்வைப் படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

29 ஆண்டுகள் சென்ற பின்னரும் உறவுகளை இழந்து தவிக்கும் தமக்கு நல்லாட்சி அரசாங்கமானது நீதியை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஊரிக்காடு பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய இராணுவப் படைகள் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்களை முன்னெடுத்தனர்

ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பாகிய இந்த தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் 4 ஆம் திகதிகளிலும் தொடர்ந்தன

வல்வெட்டித்துறையிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்தி வல்வெட்டித்துறையிலிருந்து யாரும் வெளியேறிச்செல்ல முடியாத வகையில் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்த தொடர் தாக்குதல்களில் 63 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டும் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டதோடு 100 பேர் காயமடைந்தனர்

இதன்போது 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன

வல்வெல்டித்துறை எங்கும் சடலங்கள் அவல ஓலங்கள் காயமடைந்த கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள் ஒலித்தன.

இந்த படுகொலை இடம்பெற்று 29 ஆண்டுகள் கடந்த போதிலும் வல்வெட்டித்துறை மக்களின் மனங்களில் ரண வடுவாக இந்த படுகொலை சம்பவம் பதிவாகியுள்ளது

இந்நிலையில் வல்வைப் படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறை சந்தியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

இந்த நினைவு தினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக போராளிகள் தலைவர் வேந்தன், பேச்சாளர் துளசி , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , நகரசபைத்தலைவர் கருணானந்த ராசா, உபதலைவர் , உறுப்பினர்கள் ,வல்வை விளையாட்டு கழகத்தின் தலைவர் பிரேம்குமார் மற்றும் வல்வை மக்கள் என பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்

அத்துடன் வல்வை படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான ஈகைச்சுடரை வல்வை விளையாட்டு கழகத்தின் தலைவர் பிரேம்குமார் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்

இதனையடுத்து படுகொலை சம்பவத்தை நினைவு கூர்ந்து அனைவராலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

இதன் போது 1989 ஆண்டில் வல்வை படுகொலையின் போது பிரஜைகள் குழுவின் தலைவராக செயற்பட்ட செல்வேந்திரா இதன் போது நினைவுரை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!